Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் ராணுவம்..!

Siva
புதன், 7 மே 2025 (08:24 IST)
இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதி முகாம்களில், இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் குறிவைக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
 
பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி கூறுகையில், “இந்தியா மூன்று இடங்களில் கோழைத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் வெட்கக்கேடானது. அவர்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்பதை திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்” என்றார்.
 
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறுகையில், “பாகிஸ்தானின் ஐந்து இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் இந்த போர் நடவடிக்கைக்கு தக்க பதிலடி பாகிஸ்தான் கொடுக்கும். ஒட்டுமொத்த நாடும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு துணையாக நிற்கும். பாகிஸ்தானுக்கும் நம்முடைய ராணுவத்திற்கும், இந்தியாவை எப்படி கையாளுவது என்று தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments