இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டு அதில் பாகிஸ்தான் வ்என்றால் நடிகை மாதுரி தீட்சித் எனக்கு தான் என பாகிஸ்தான் மதகுரு ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தால் நான்கு நாட்கள் கூட பாகிஸ்தான் தாக்கு பிடிக்காது என்றும் இந்தியாவிடம் சரணடைவது உறுதி என்றும் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் இந்தியாவுடன் ஆன போரில் எங்களால் வெற்றி பெற முடியும் என்று வெற்று பேச்சுக்களை பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் மதகுரு ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தியாவுடன் ஆன போரில் பாகிஸ்தான் வென்றால் நடிகை மாதுரி தீட்சித் எனக்குத்தான் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஒரு அரசியல்வாதி இந்திய நடிகைகளை போர் முடிந்தவுடன் தூக்கிக்கொண்டு வருவேன் என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தற்போது மத குருவும் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.