பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பின்னர், அதைப் பற்றி எக்ஸில் பதிவு செய்யப்பட்டது.
இது பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இது குறித்து விரிவான விளக்கத்தை இன்று காலை 10 மணிக்கு பாதுகாப்பு துறை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில் "ஆபரேஷன் சிந்துர்" என்ற பெயரில் பாகிஸ்தானில் 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.