Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

Advertiesment
சூடான்

Siva

, வியாழன், 30 அக்டோபர் 2025 (08:26 IST)
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரின் காரணமாக ராணுவமே தனது சொந்த நாட்டு மக்களை கொலை செய்துள்ளது.
 
அரசு படைகளுடன் மோதும் துணை இராணுவப் படையினர் வடக்கு தர்ஃபூர் மாகாணத்தின் தலைநகரான எல்-ஃபேஷரில் உள்ள சௌதி மகப்பேறு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
 
அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், குழந்தைகள் மற்றும் அவர்களை சந்திக்க வந்த உறவினர்கள் உட்பட 460-க்கும் அதிகமான மக்களை சுட்டு கொன்றதாக உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்று நடந்துள்ளது.
 
இந்தப் படுகொலையை சூடானின் மருத்துவர்கள் அமைப்பும் உறுதி செய்துள்ள நிலையில், RSF-ன் தளபதி ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ, தமது வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
2023 முதல் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் துணை இராணுவப் படையினரின் இந்த செயல், போர் குற்றம் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் சூடானில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதை காட்டுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ்.. சகதியுள்ள சாலையில் குழந்தை பெற்ற பெண்..!