அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறைமுகமாக விடுத்த நாடு கடத்தும் அச்சுறுத்தலுக்கு, எலான் மஸ்க் தனது சமூக வலைத்தள தளமான 'எக்ஸ்' பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தை தீவிரப்படுத்த என் மனம் மிகவும் தூண்டுகிறது. மிகவும், மிகவும் தூண்டுகிறது. ஆனால் இப்போதைக்கு நான் அதிலிருந்து விலகியிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் வரி குறைப்பு மற்றும் செலவின மசோதாவை "முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடியாக டிரம்ப், எலான் மஸ்கை நாடு கடத்துவது குறித்து 'பரிசீலிப்பேன்' என்று தெரிவித்த பின்னரே மஸ்க் இந்த பதிவை வெளியிட்டார்.
டொனால்ட் டிரம்ப் எலான் மஸ்கை நாடு கடத்தும் அச்சுறுத்தலுடன் நிற்கவில்லை. அமெரிக்க அதிபர் தனது நிர்வாகம், DOGE என்ற செலவு குறைப்புப் பிரிவை, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எதிராக பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்தார். DOGE என்பது எலான் மஸ்க் சிறப்பு அரசு ஊழியராக தலைமை தாங்கிய ஒரு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
"நாங்கள் DOGE-ஐ எலான் மீது ஏவ வேண்டியிருக்கலாம். DOGE என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? DOGE என்பது எலானை விழுங்கக்கூடிய ஒரு அசுரன்" என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். எலான், டிரம்ப் மோதலால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.