மதுரை பாராபத்தியில் நடைபெற்ற 'தமிழக வெற்றிக் கழகம்' மாநாட்டில், மேடை ஏற முயன்ற தொண்டர் ஒருவரை தாக்கியதாக கூறி, தவெக தலைவர் நடிகர் விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21 அன்று மதுரை பாராபத்தியில் நடைபெற்ற மாநாட்டில், நடிகர் விஜய்யை பார்க்க லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். அப்போது, மேடைக்கு அமைக்கப்பட்ட ராம்ப் மீது ஏறி, விஜய்யை நெருங்க ஒரு தொண்டர் முயற்சித்துள்ளார். அப்போது, விஜய்யின் பாதுகாவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகியோர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், தவெக தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது.