Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இம்ரான்கானை சிறையிலேயே கொலை செய்ய ஆசிப் முநீர் திட்டம்: சகோதரி அதிர்ச்சி குற்றச்சாட்டு

Advertiesment
இம்ரான் கான்

Mahendran

, புதன், 2 ஜூலை 2025 (12:57 IST)
பாகிஸ்தானில்  முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சிறையிலேயே படுகொலை செய்ய சதி நடைபெற்று வருவதாக அவரது சகோதரி அலீமா கான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
 
இம்ரான் கானின் ஜாமீன் மனுக்கள் வேண்டுமென்றே ஒத்திவைக்கப்படுவதாகவும், தனது சகோதரர் நியாயமான விசாரணை அல்லது நிவாரணம் இல்லாமல், காலவரையின்றி சிறையில் வைக்கப்படுவதற்காக சட்ட செயல்முறை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். 
 
மேலும் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் கூட இம்ரானுக்கு கிடைப்பதில்லை என்றும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கூட அவரை சந்திக்க மறுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். 
 
ராணுவ தளபதி முனீர் பாகிஸ்தானில் அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சியை நடத்தி வருவதாகவும், இம்ரான் கானை அரசியல் ரீதியாக அழிப்பதற்காக தனிமைப்படுத்தப்படுவதாகவும், சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.  மேலும்ன்  எந்த நேரத்திலும் சிறையிலிருந்து "கெட்ட செய்தி" வரலாம் என்று அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வின் போது மின்வெட்டு.. மறு தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு