சிங்கப்பூர் அரசு செலவு போக மீதமிருக்கும் பணத்தை மக்களுக்கு போனஸாக வழங்க திட்டமிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் சிங்கப்பூர் நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட், சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவில் அரசுக்கு செலவெல்லாம் போக 7600 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் 760 கோடி) மீதமிருப்பதாக தெரிவித்திருந்தார். மீதமிருக்கும் தொகையை மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிட்ட அரசு இந்த தொகையை 21 வயது நிரம்பிய சிங்கப்பூர் வாழ் மக்களுக்கு போனஸாக வழங்க திட்டமிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் 4 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை கொடுக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் சுமார் 27 லட்சம் குடிமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் சிங்கப்பூர் வாழ் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.