Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரணம் தண்டனை விதித்த நீதிபதியை கொண்டாடும் மக்கள்

Advertiesment
மரணம் தண்டனை விதித்த நீதிபதியை கொண்டாடும் மக்கள்
, திங்கள், 19 பிப்ரவரி 2018 (19:54 IST)
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி வேல்முருகனை மக்கள் வாழ்க என கோஷமிட்டனர்.
 
சென்னையை சேர்ந்த தஷ்வந்த் என்பவன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 7ம்தேதி, தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிறுமியின் உடலையும் எரித்து கொலை செய்தான். எனவே அவன் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை ஆரம்பித்த நாள் முதல் இருந்தே, நீதிபதி வேல்முருகன் வாய்தா கொடுக்குமால் வழக்கை முடிந்த வரை காலம்கடத்தாமல் வேகமாக முடித்துள்ளார்.
 
இந்நிலையில் அனைவரும் இன்று தீர்ப்பை எதிர்பார்த்த நிலையில், தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி வேல்முருகனுக்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் வேல்முருகன் வாழ்க என்று நீதிமன்ற வாசலில் மக்கள் கோஷமிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமி ஹாசினி கொலை வழக்கின் தீர்ப்பு: பதற வைக்கும் பின்னணி