பெண்களுக்கு இனி ஆண்கள் அனுமதி தேவை இல்லை: சவுதியில் புதிய மாற்றங்கள்!

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (20:53 IST)
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது. அப்படி சமீபத்தில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாட்டை காண்போம்...
சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர். 
 
சவுதி அரசின் பாதுகாப்பாளர் சட்டத்தின்படி, பெண் ஒருவர் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்றால், தந்தை, சகோதரர் கணவர் ஆகியோரில் ஒருவரது அனுமதி பெற்றிருக்க வேண்டும். 
 
ஆனால், தற்போது ஆண்கள் அனுமதி இல்லாமல் இனி சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.

இது தவிர்த்து, அந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்டவும், சவுதியின் 87 வது தேசிய தினத்தையொட்டி கடந்த ஆண்டு பெண்கள் முதல் முதலாக மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments