Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிலநடுக்கத்தை பார்வையிட சென்ற அமைச்சர், கவர்னர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 13 பேர் பலி

Advertiesment
ஹெலிகாப்டர் விபத்து | மெக்சிகோ | நிலநடுக்கம் | survey quake damage | Mexico | helicopter crash | earthquake | Americas
, ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (08:24 IST)
மெக்சிகோ நாட்டில் சமீபத்தில் 7.5 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை எனினும், பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிலநடுக்கத்தை பார்வையிட மெக்சிகோவின் உள்துறை அமைச்சர் நவரேட்டே, ஒக்சாக்கா மாநில கவர்னர் அலேஜான்ட்ரோ முரட் மற்றும் அதிகாரிகள் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்தனர்.

இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தரையில் நின்று ஹெலிகாப்டர் இறங்குவதை வேடிக்கை பார்த்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இருப்பினும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அமைச்சர் மற்றும் கவர்னர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மெக்சிகோ அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரிபுராவில் இன்று சட்டமன்ற தேர்தல்: 25 வருட ஆட்சியை தக்க வைக்குமா கம்யூனிஸ்ட்?