Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்மீக ஆலோசகரை மூன்றாவது திருமணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்

Advertiesment
ஆன்மீக ஆலோசகரை மூன்றாவது திருமணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்
, திங்கள், 19 பிப்ரவரி 2018 (13:48 IST)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் சமீபத்தில் தனது ஆன்மீக குருவை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் லாகூரில் மிக எளிமையாக நடந்தது
 
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆன்மீக ஆலோசனை பெற இம்ரான்கான், புஷ்ரா பிபி மேனகா என்ற பெண்ணை சந்தித்தார். அவரையே ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்ட இம்ரான்கான், அவர் காட்டிய வழியில் நடந்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த திருமணம் குறித்து இம்ரான்கான் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் முப்தி முகமது சயீத் கூறியபோது, 'இரண்டு இதயங்கள் மற்றும் ஆன்மாக்கள் இணைந்திருக்கின்றது. இம்ரான் கானின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.
 
இம்ரான்கான் கடந்த 1995-ம் ஆண்டு லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணையும்,  2015-ம் ஆண்டு டி.வி.தொகுப்பாளினி ரீசும் கான் என்ற பெண்ணையும் திருமணம் செய்து இருவரையும் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் தனியார் நிறுவன பெண் ஊழியர் மீது ஆசிட் வீச்சு