Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் விண்வெளி ஆய்வு தளத்தை தாக்கிய ரஷ்யா! – 3 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (09:04 IST)
உக்ரைன் மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது உக்ரைனின் விண்வெளி ஆய்வு மையத்தை தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 150 நாட்களை தாண்டியுள்ளது. இந்த போரில் உக்ரைன் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு தொடர்ந்து போராடி வந்தாலும், ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ளது. உக்ரைனில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷ்யா அந்த பகுதி மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை அளிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதேசமயம் உக்ரைன் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உக்ரைனின் மைய பகுதியில் உள்ள டினிப்ரோ நகரில் உள்ள விண்வெளி ராக்கெட்டுகளை தயாரிக்கும் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments