Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்...குழந்தை உள்ளிட்ட 23 பேர் பலி!

ukraine refugees
, வெள்ளி, 15 ஜூலை 2022 (14:08 IST)
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் தொடர்ந்து போர்  நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளைச் சேர்ந்த அப்பாவி மக்களும் ராணுவவீரர்க்ளும் பலியாகி வருகின்றனர். இதற்கு ரஷ்ய  நாட்டிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கண்டனங்கள் கொடுத்தாலும், அதை ரஷ்யா பொருட்படுத்தவில்லை.

தற்போது ரஷ்யா மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது, இதில், உக்ரைனின் பெரும்பாலான  நகரங்கள் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில்,  உக்ரைன் தலை நகர் கிவ்வில் இரிஉந்து 268 கிலோமீட்டர் தூரத்தி உள்ள மத்திய பகுதியாக வினிட்சியா நகர் மீது நேற்று ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள அரசு அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.

இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 23  பேர் உயிரிழந்தனர். மேலும் 90 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர், ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதாப் போத்தனின் கடைசி படத்தை தயாரித்தவர் இந்த நடிகை தான்: இரங்கல் செய்தி