உக்ரைனில் உள்ள மக்கள் ரஷ்யாவின் குடியுரிமையை பெறுவதற்கான புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் இருதரப்பு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தான் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க விளாடிமிர் புதின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களில் உள்ள உக்ரைன் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான ஆணை கடந்த 2019ல் கொண்டு வரப்பட்டது.
அதை தொடர்ந்து தற்போது ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளில் வாழும் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான புதிய ஆணையில் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.