Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிப்பு! – ரஷ்யா பயன்படுத்திய ஆயுதம்!

Advertiesment
Russia
, வியாழன், 14 ஜூலை 2022 (08:42 IST)
உக்ரைனில் ரஷ்யா கடந்த 150 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்களை கொன்று குவித்துள்ளது.

அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 150 நாட்களை தாண்டியுள்ளது. இந்த போரில் உக்ரைன் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு தொடர்ந்து போராடி வந்தாலும், ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ளது. உக்ரைனில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷ்யா அந்த பகுதி மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை அளிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதேசமயம் போரை மேலும் தீவிரமாக்கி சீக்கிரத்தில் முடிப்பதற்காக ரஷ்யா போரில் பல அதிநவீன ஏவுகணைகளையும் பயன்படுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நவீன ஏவுகணை கொண்டு மைக்கோலைவ் கப்பல் கட்டும் தளத்தில் நடத்திய தாக்குதலில் 350 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதேபோல் தற்காலிக ராணுவ முகாம் ஒன்றில் நடத்திய தாக்குதலில் 70 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்..! – சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா?