கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 88.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார் என்ற தகவல் உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து வாரங்களுக்கு மேல அவர் நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் அவர் வீடு திரும்பினார்.
அதன் பிறகு ஈஸ்டர் திருநாளை ஒட்டி பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களை சந்தித்து ஆசி வழங்க இருந்தார். ஆனால் இன்று காலை வாடிகானில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் அமெரிக்காவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மத குருவாக தேர்வு செய்யப்பட்ட போப் பிரான்சிஸ் இன்று காலமானதை அடுத்து விரைவில் அடுத்த போப்பாண்டவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது