Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாய் உயிரிழப்பு.. தந்தை மருத்துவமனையில்.. மகள் திருமண தினத்தில் நடந்த சோகம்..!

Advertiesment
திருமணம்

Siva

, வியாழன், 10 ஏப்ரல் 2025 (08:05 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்த நாளில், அவரது தாய் விபத்தில் உயிரிழந்ததாகவும், தந்தை படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி – மாலதி தம்பதியின் மகள் சுசித்ரா. இவருக்கும் சதீஷ்குமாருக்கும் நேற்று திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திருமணத்திற்காக சில பொருட்களை எடுக்க செய்வதற்காக ரங்கசாமி மற்றும் மாலதி ஆகிய இருவரும் வீட்டிற்கு சென்று, திருமண மண்டபத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுசித்ராவின் தாய் மாலதி உயிரிழந்தார். தந்தை ரங்கசாமி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தாய், தந்தைக்கு நடந்த விபத்தை மறைத்து, உறவினர்கள் சுசித்ராவுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு தாய் இறந்த செய்தியை மாலதிக்கு கூறிய நிலையில் அவர் கதறி அழுதது உறவினர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மகள் திருமண தினத்தில் தாய் இறந்த சம்பவமும், தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் இந்தியா முழுவதும் டோல்கேட் இருக்காது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு..!