Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடையுடன் விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி: அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு

குடையுடன் விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி: அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (08:27 IST)
குடையுடன் விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி: அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடி இன்று அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது லேசாக மழை தூறியதால் குடை பிடித்தபடி இறங்கிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்களின் அழைப்பின் பேரில் 4 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவர் அதிகாலை 4:00 மணி அளவில் விமானத்தில் இறங்கிய போது லேசாக மழை தூறியதால் அவர் குடை பிடித்த படியே விமானத்தின் படிக்கட்டில் இருந்து இறங்கினார் 
 
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று  ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?