Publish Date: Thu, 23 Sep 2021 (08:19 IST)
Updated Date: Thu, 23 Sep 2021 (08:22 IST)
அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் பல நாடுகளிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி கொரொனாவுக்கு எதிராக வீரியமாக செயல்படும் நிலையில் இரண்டு டோஸுக்கு பிறகு பூஸ்டராக மூன்றாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்த தடை இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இரண்டாவது டோஸுக்கு பிறகு 6 மாதங்கள் கழித்தே பூஸ்டர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.