நீண்ட நாட்கள் கழித்து பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.
கொரோனா காரணமாக நீண்ட காலமாக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளாமல் இருந்த பிரதமர் மோடி நாளை அமெரிக்கா புயணம் செல்கிறார். அங்கு நாளை மறுதினம் 23ம் தேதி முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியையும் சந்தித்து பேச உள்ளார்.
மேலும் 24ம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி அவருடன் ஆப்கானிஸ்தான் விவகாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளார். இதனை அடுத்து அமெரிக்கா, இந்தியா ,ஜப்பான் ,ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட QUAD கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த சந்திப்புகளுக்கு பிறகு நியூயார்க் செல்லும் மோடி, 25ஆம் தேதி ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.