Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
, புதன், 22 செப்டம்பர் 2021 (10:23 IST)
கனடா பிரதமராக 3 வது முறையாக தேர்வான ஐஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 
கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால் ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது.  
 
இதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை. 
 
ஆம், மொத்தமுள்ள 338 இடங்களில் பெருபான்மையை பெற 170 இடங்கள் தேவைப்படும் நிலையில் லிபரல் கட்சிக்கு 157 இடங்களே கிடைத்துள்ளது. தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்து கொண்டுள்ளார். 
 
இந்நிலையில் கனடா பிரதமராக 3 வது முறையாக தேர்வான ஐஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு இந்தியா - கனடா இடையேயான உறவு மேலும் வலுப்பட தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்