லண்டனில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் பல்செட்டை விழுங்கிய சம்பவம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இங்கிலாந்தின் லண்டன் நகரை சேர்ந்தவர் ஜாக். 77 வயதாகும் இவர் வயிற்றில் உள்ள கட்டி ஒன்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஆனால் அதன் பின்னர் அவருக்கு தொண்டை வலி அதிகமாகி, எதையும் சாப்பிட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் தொண்டையில் பல்செட் வடிவில் ஏதோ ஒன்று இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அறுவை சிகிச்சையின் போது பல் செட்டை விழுங்கி விட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பல்செட்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதனால் அவருக்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டனர்.