Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருண் ஜெட்லிக்கு உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

Advertiesment
அருண் ஜெட்லிக்கு உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
, வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (20:09 IST)
முன்னால் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அருண் ஜெட்லி, கடந்த 2014-2019 இடையிலான மோடி அரசின் போது மத்திய நிதியமைச்சராக செயலாற்றினார். இவருக்கு வயது 66. கடந்த 2018 ஆம் ஆண்டு, அருண் ஜெட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் மருத்துவ பரிசோதனையில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், தான் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி இருப்பதாக முடிவு செய்துள்ளேன் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கத்தை அவசரப்பட்டு விற்பனை செய்ய வேண்டாம்: நகை மதிப்பீட்டாளர்கள் கருத்து: