இந்தியாவுடனான மோதலால் தனது வான் எல்லையை இந்தியாவுக்கு மூடியதால் பாகிஸ்தானின் விமானத்துறை வருவாய் குறைந்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில், இந்தியாவுடனான போர் காரணமாக, சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான், இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பயணிக்க தடை விதித்தது.
இதனால் இந்திய விமானங்கள் ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறைக்கு ரூ.127 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் மொத்த வருவாய் பாதிக்கப்படவில்லை என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக வருவாயை பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K