Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

Advertiesment
PM Modi raksha bandhan

Prasanth K

, புதன், 6 ஆகஸ்ட் 2025 (14:57 IST)

ரக்‌ஷாபந்தனுக்கு ஆண்டுதோறும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்ணுக்கு கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்த ஆண்டாவது பிரதமர் இல்லத்தில் இருந்து அழைப்பு வருமா என காத்திருக்கிறார்.

 

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவர் கமர் மொஹ்சின் என்ற பெண். கடந்த 1981ல் தனது திருமணத்திற்கு பிறகு இந்தியாவிற்கு குடியேறிய மொஹ்சின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் வசித்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாக தற்போதைய பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்தே அவருக்கு ரக்‌ஷாபந்தனுக்கு ராக்கி கட்டி வந்துள்ளார் மொஹ்சின்.

 

அதன் பின்னர் நரேந்திர மோடி குஜராத் தேர்தலில் வென்று தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்து வந்த காலங்களிலும் ரக்‌ஷாபந்தனுக்கு மொஹ்சின் ராக்கி கட்டுவது தொடர்ந்து நடந்தே வந்தது. பிரதமரான பிறகும் ஆண்டுதோறும் ரக்‌ஷாபந்தனில் மொஹ்சினிடம் ராக்கி கட்டிக் கொள்கிறார் பிரதமர் மோடி.

 

ஆனால் கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் பிரதமருக்கு ராக்கி கட்ட மொஹ்சினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டாவது ராக்கி கட்ட வாய்ப்பு கிடைக்குமா என ஆவலாக தானே ராக்கியை செய்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறார் மொஹ்சின். வரும் ஆகஸ்டு 9ம் தேதி ரக்‌ஷாபந்தன் விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் மொஹ்சினுக்கு பிரதமர் இல்லத்தில் இருந்து அழைப்பு வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!