சீனாவில் மேலும் ஒரு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 3500 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஏற்கனவே சாங்சன் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு ஊரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
சற்று முன் வெளியானது தகவலின்படி 1.70 கோடி பேர் வசிக்கும் சென்சின் என்ற நகரில் முழு ஊரடங்கு என சீனா அறிவித்துள்ளது
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று