நடிகர்கள் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பத்து தல.
கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.
இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது. ஆனால் அவர் இன்னும் வந்தபாடில்லை. இதனால் இந்த படத்தின் கதாநாயகனான கௌதம் கார்த்திக் தான் ஒத்துக்கொண்ட வேறு படங்களில் நடிக்க சென்றுவிடலாமா என்ற யோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
பத்து தல படத்தில் சிம்பு ஒரு கௌரவ வேடத்திலேயே நடிக்கிறார். படத்தின் கதாநாயகன் கௌதம் கார்த்திக்தான். ஆனால் சிம்புவின் மாநாடு அதிரி புதிரி ஹிட் ஆகிவிட்டதால் இப்போது பத்து தல படத்தில் சிம்புவின் காட்சிகளை அதிகமாக்கிவிட்டு, கௌதம் கார்த்திக்கின் காட்சிகளை குறைக்கும் முடிவில் உள்ளார்களாம் படக்குழுவினர். இதையறிந்த கௌதம் கார்த்திக் அப்செட்டில் இருப்பதாக சொலல்ப்படுகிறது.