Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓ நண்பனே.. எலான் மஸ்க் மன்னிப்பை ஏற்ற ட்ரம்ப்! மீண்டும் இணைந்த கைகள்?

Advertiesment
Elon Musk vs Trump

Prasanth K

, வியாழன், 12 ஜூன் 2025 (12:15 IST)

எலான் மஸ்க் - டொனால்ட் ட்ரம்ப் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் எலான் மஸ்க் தெரிவித்த மன்னிப்பை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக பெரிதும் உழைத்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். இதனால் தேர்தலுக்கு பிறகு அவருக்கு அமெரிக்காவின் DODGEல் முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டது. 

 

சமீபத்தில் அந்த பொறுப்புகளில் இருந்து வெளியேறிய மஸ்க், சமீபத்தில் ட்ரம்ப் அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவை கடுமையாக விமர்சித்தார். அதை தொடர்ந்து இருவரிடையே வாக்குவாதம் வளர்ந்த நிலையில், சிறார் பாலியல் வழக்கில் கூட ட்ரம்ப்க்கு தொடர்பு இருப்பதாக எலான் மஸ்க் கிளப்பி விட அந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து எலான் மஸ்க்கின் நிறுவனங்களுக்கு வரி விதிப்பை ட்ரம்ப் அதிகரித்தார். தொடர்ந்து அவர்களுக்குள் மோதல் வலுத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப் குறித்து தான் பேசிய விதம் குறித்து வருந்துவதாக ஒரு பதிவை இட்டிருந்தார் எலான் மஸ்க்.

 

இதற்கு ட்ரம்ப் தரப்பில் எந்த ரியாக்‌ஷனும் இல்லாத நிலையில், நேற்று நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ட்ரம்ப் “அவர் அதை செய்தது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். இதன்மூலம் மஸ்க்கின் மன்னிப்பை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டதாக பேசிக் கொள்ளப்பட்டது.

 

அதை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருந்து எலான் மஸ்க்கிற்கு போன் செய்யப்பட்டதாகவும், எலான் மஸ்க் - ட்ரம்ப் இடையே சமாதானம் குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இரு நண்பர்கள் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? டாக்டர் ராமதாஸ் விளக்கம்..!