Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

Advertiesment
Elon musk Trump

Prasanth K

, புதன், 11 ஜூன் 2025 (14:34 IST)

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான வார்த்தை மோதல் வலுத்து வந்த நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக பெரிதும் உழைத்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். இதனால் தேர்தலுக்கு பிறகு அவருக்கு அமெரிக்காவின் DODGEல் முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டது. 

 

சமீபத்தில் அந்த பொறுப்புகளில் இருந்து வெளியேறிய மஸ்க், சமீபத்தில் ட்ரம்ப் அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவை கடுமையாக விமர்சித்தார். அதை தொடர்ந்து இருவரிடையே வாக்குவாதம் வளர்ந்த நிலையில், சிறார் பாலியல் வழக்கில் கூட ட்ரம்ப்க்கு தொடர்பு இருப்பதாக எலான் மஸ்க் கிளப்பி விட அந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதற்கு பதிலளித்து பேசிய ட்ரம்ப், ‘மஸ்க் போன்ற சுயநினைவை இழந்த நபர்களோடு பேச தயாரில்லை என்று கூறினார். இந்நிலையில் தற்போது தனது பேச்சு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் “கடந்த வாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகள் எல்லை மீறி சென்றுவிட்டன, அதற்காக நான் வருத்தும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

 

இந்த மன்னிப்பு பதிவு மூலம் இருவர் இடையேயான சண்டை முடிவுக்கு வந்து சமாதானம் எட்ட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி