வடகொரியா பரிசோதித்த ஏவுகணைகள் சில ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலமாகவே அமெரிக்கா – வடகொரியா இடையே பூசல் நிலவி வரும் நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
சமீபத்தில் வடகொரியா நடத்திய அணு ஆயுத ஏவுகணை சோதனை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. அதில் சில ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதியில் விழுந்து தாக்கியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த செயல்பாடுகள் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.