Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேஜிஎஃப் -2 படத்தின் 2 வது நாள் வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு

கேஜிஎஃப் -2  படத்தின் 2 வது  நாள் வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு
, சனி, 16 ஏப்ரல் 2022 (23:22 IST)
கேஜிஎஃப் -2  படத்தின்   2 வது  நாள் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
 
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
 
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி                                    கேஜிஎஃப் சாப்டர் 2  ரிலீசானது.
 
பீரியட் ஆக்சன் இப்படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.
 
தமிழ், இந்தி,  கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமான கே ஜிஎஃப்-2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை கே.ஜி.எஃப் படக்குழு அறிவித்தனர்.
 
அதில்,  நேற்று ஒரு நாள் இந்தியா முழுவதும் ரூ .134.5 கோடிக்கு வசூல் குவித்துள்ளததாக ஒரு போஸ்டரில் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், 2 வது நாளில் இப்படம் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இந்நிலையில்,  கே ஜிஎஃப்-2 படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பதற்குள் கேஜிஎஃப்- 3 வது பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிமாறன் கைக்காட்டும் நபருக்கு படம் இயக்க வாய்ப்பு ! தயாரிப்பாளர் அறிவிப்பு