Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேஜிஎஃப் -2 படக்குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

kgf
, ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (00:04 IST)
கேஜிஎஃப் -2  படக்குழுவினரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி                                  கேஜிஎஃப் சாப்டர் 2  ரிலீசானது.

பீரியட் ஆக்சன் இப்படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.

தமிழ், இந்தி,  கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமான கே ஜிஎஃப்-2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை கே.ஜி.எஃப் படக்குழு அறிவித்தனர்.

அதில்,   நேற்று ஒரு நாள் இந்தியா முழுவதும் ரூ .134.5 கோடிக்கு வசூல் குவித்துள்ளததாக ஒரு போஸ்டரில் தெரிவித்தனர்.

இந்நிலையில், 2 வது நாளில் இப்படம் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இ ந்நிலையில்,  கே ஜிஎஃப்-2 படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பதற்குள் கே ஜிஎஃப்- 3 வது பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
webdunia

 இந்நிலையில், கே.ஜி.எஃப் படத்தைப் பார்த்த சூப்பர் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூரை தொலைபேசியின் மூலம்தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். அதேபோல் நடிகர் யாஷ் மற்றும் படக்குழுவினரை   பாராட்டியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஜிஎஃப் -2 படத்தின் 2 வது நாள் வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு