Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயரம் குறைந்ததா எவரெஸ்ட்? மீண்டும் அளக்க திட்டம்!!

உயரம் குறைந்ததா எவரெஸ்ட்? மீண்டும் அளக்க திட்டம்!!
, திங்கள், 14 அக்டோபர் 2019 (11:26 IST)
எவரெஸ்டின் உயரத்தை மீண்டும் அளப்பது என கூட்டு சேர்ந்து முடிவெடுத்துள்ளது சீனா மற்றும் நேபாள். 
 
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட், கடல் மட்டத்தில் இருந்து 8,848 மீ உயரமானது. ஆம், கடந்த 1954 ஆம் ஆண்டும் இந்தியா மேற்கொண்ட கணக்கீட்டின் படி எவெரெஸ்ட் சிகரம் 8,848 மீ உயரமானது என அறிவிகப்பட்டது. 
 
இதனை தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க கடந்த 2017 ஆம் ஆண்டு நேபாள அரசு குழு ஒன்றை அமைத்தது. நேபாள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஒரு காரணமும் உள்ளது. 
webdunia
கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி நிலைகுலைந்ததாக செய்தி வெளியானது. எனவே மீண்டும் எவரெஸ்ட் உயரத்தை அளக்க குழு அமைக்கப்பட்டது. 
 
இந்நிலையில், சமீபத்தி தமிழகம் வந்து அங்கிருந்து நேபாளம் சென்ற சீன் அதிபர் ஜின்பிங் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளத்துடன் கைகோர்ப்பதாக அறிவித்தது. 
எனவே விரைவில் எவரெஸ்டின் உயரம் அளக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்குநேரியில் வாக்கு இயந்திரங்கள் இடமாற்றமா??