Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்குநேரியில் வாக்கு இயந்திரங்கள் இடமாற்றமா??

Advertiesment
திமுக

Arun Prasath

, திங்கள், 14 அக்டோபர் 2019 (11:19 IST)
நாங்குநேரியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டதாக திமுக புகார் அளித்துள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடாத நிலையில் அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இடைத்தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வரும் வேளையில், இடைத்தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி, 30 மின்னணு வாக்கு இயந்திரங்கள், நெல்லை மாவாட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில் திமுக இவ்வாறு புகார் அளித்துள்ளது, இடைத்தேர்தலுக்கான ”ஸ்டண்ட்” எனவும் பலரால் விமர்சிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லாம் ஒருநாள் கூத்தா? ஒளி இழந்த மாமல்லபுரம்: கடுப்பான மக்கள்!