Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 1200 க்கும் மேற்பட்டோர் பலி!

pakistan
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:32 IST)
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், தற்போது சபாஸ் சாரிஃப் புதிய பதவியேற்றார்.

இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு, பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்த நிலையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்ததால் அங்கு பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ளது.

இந்த  நிலையில், பாகிஸ்தானில் பருவமழை பெய்து வருகிறது. இங்கு கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு சிந்த் மகாணம், கைபர், பக்துங்க்வா,  பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.இதனால் அங்கு தேசிய அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் மொத்தம் 3 கோடியே 30 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 1200க்கும் மேற்பட்டடோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழி மனிதன் மரணம்: 26 ஆண்டுகள் காட்டுக்குள் தனிமையில் வாழ்ந்த மர்ம நபர்