Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூண்டோடு எம்.பி பதவியை ராஜினாமா செய்த இம்ரான் & கோ: பின்னணி என்ன?

Advertiesment
கூண்டோடு எம்.பி பதவியை ராஜினாமா செய்த இம்ரான் & கோ: பின்னணி என்ன?
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:01 IST)
பாகிஸ்தானில் இம்ரான் கான் உட்பட அவரது கட்சியினர் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

 
இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வியடைந்தது. இதனை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான் உடனடியாக பிரதமர் இல்லத்திலிருந்து அவர் காலி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியது.
 
இதனைத்தொடர்ந்து ஷெபாஸ் ஷரீப், பாகிஸ்தான் பிரதமராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரீஃபை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இம்ரான் கான் உட்பட அவரது கட்சியினர் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
 
எம்.பி. பதவி ராஜினாமா குறித்து இம்ரான் கான் தெரிவித்துள்ளதாவது, ஊழல்களை செய்துள்ள ஒருவர் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க போகிறார். இதை விட ஒரு நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் எதுவும் இருக்க முடியாது. திருடர்களுடன் ஒன்றாக அமர எனக்கு விருப்பமில்லை. அதனால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

800-க்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!