Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா பிடிக்கும் என்றால் அங்கேயே போங்கள் - பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் மர்யம் நவாஸ்

Maryam Nawaz
, சனி, 9 ஏப்ரல் 2022 (17:56 IST)
இம்ரான் கானுக்கு இந்தியாதான் பிடிக்கும் என்றால் அங்கேயே செல்லுங்கள் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் துணைத் தலைவர் மர்யம் நவாஸ்.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைவிதியை தீர்மானிக்கும் தேசிய அவையின் (நாடாளுமன்றம்) கூட்டத்தொடர் நீண்ட தாமதத்திற்கு பிறகு இன்று பிற்பகல் மீண்டும் தொடங்கியது.

தொடக்கத்தில் பகல் 12:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு, எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் அறையில் கூடி ஆலோசனை நடத்தினர். வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஆளும் பிடிஐ தலைவர் அமீர் டோகர் ஆகியோர் ஆளும் கட்சி சார்பிலும், பிலாவல் பூட்டோ-சர்தாரி, ராணா சனாவுல்லா, அயாஸ் சாதிக், நவீத் கமர் மற்றும் மௌலானா ஆசாத் மஹ்மூத் ஆகியோர் எதிர்கட்சி சார்பிலும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் எதிர்கட்சித் தலைவரின் அறையில் நடைபெற்றது. இதையடுத்து பிற்பகலில் நாடாளுமன்ற அமர்வு கூடியபோது பேசிய பிஎம்எல் நவாஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் கவாஜா சாத் ரஃபீக், இஃப்தாருக்குப் பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் உறுதியளித்ததாகக் கூறினார்.

இதற்கிடையே, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்த துணை சபாநாயகரின் ஏப்ரல் 3 உத்தரவை ரத்து செய்த தேசிய அவையின் கூட்டத்தை கூட்ட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து ஆளும் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை 17ல் நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு