சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலக தலைவர்கள் முன்னிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலை குறிப்பிட்டு, இது இந்தியாவின் ஆன்மாவின் மீதான தாக்குதல், மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கான சவால் என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
தீவிரவாதம் குறித்த தனது நிலைப்பாட்டை அவர் தெளிவாக வெளிப்படுத்தினார். கடந்த நாற்பது ஆண்டுகளாக தீவிரவாதத்தால் இந்தியா துன்புற்றுள்ளது. பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளையும், பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களையும் இழந்துள்ளனர், என்றார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய சூழல், 'பாதுகாப்பு, இணைப்பு, வாய்ப்பு' என்பதாக மாறியுள்ளது, என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான இருதரப்பு சந்திப்புக்கு பிறகு, இந்தியா தனது வெளியுறவு கொள்கையில் 'மூன்றாவது நாட்டின் கண்ணோட்டம்' இல்லாமல், 'தன்னுடைய சுயாதீனமான கொள்கையை'ப் பின்பற்றும் என்று இந்தியா தெளிவுபடுத்தியது.