டிக் டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்பட உலகின் சில நாடுகளில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவும் டிக் டாக் செயலியை தடை செய்ய போவதாக அறிவித்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற உடன் டிக்டாக் செயலிக்கு தடை என்று அறிவித்தது. ஆனால் சில மணி நேரங்களில் தடையை நீக்கி அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய டிரம்ப் கால அவகாசம் கொடுத்தார்.
இந்த நிலையில் டிக் டாக் செயலியை வாங்க அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பாக எலான் மஸ்க் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி, டிக் டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு ஏலம் கேட்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிக் டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குமா அல்லது எலான் மஸ்க் நிறுவனம் வாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டிக் நாக் நிறுவனம் கை மாறியவுடன் இந்தியாவில் அந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.