அமெரிக்கா உச்ச நீதிமன்றம் டிக்டாக் செயலியை தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, அதில் உள்ள 17 கோடி பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் செயலியை அதன் தாய் நிறுவனமான சீனாவின் ByteDance என்ற நிறுவனமும் நடத்தி வரும் நிலையில், அந்த நிறுவனத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும்; இல்லையேல் இந்த செயலியை அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிக்டாக் செயலியில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 17 கோடி பேர் பயனாளிகளாக இருந்து வரும் நிலையில், இந்த செயலி தடை செய்யப்பட்டால் அவர்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்று ByteDance சார்பில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிக்டாக் தடை உத்தரவை உறுதி செய்ததால், நாளை முதல் டிக்டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா உள்பட பல நாடுகளில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவும் அதை தடை செய்துள்ளது. இந்த செயலியை எலான் மஸ்க் வாங்கி, அமெரிக்காவில் அவர் Twitter போலவே அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.