Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக் செயலி.. ஒரே நாளில் நடந்த மாற்றம்..!

Advertiesment
அமெரிக்கா

Siva

, திங்கள், 20 ஜனவரி 2025 (07:55 IST)
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் டிக் டாக் செயலி அமெரிக்காவில் செயல்படும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்க இருக்கும் நிலையில் தான் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்கர்கள் டிக் டாக் சேவைகளை பயன்படுத்துவது அனுமதிக்கப்படும் என்று கூறியதை அடுத்து மீண்டும் டிக் டாக் சேவை அமெரிக்காவில் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரம்ப் முயற்சியால் டிக் டாக் செயலியை மீண்டும் அமெரிக்காவில் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக டிக் டாக் நிறுவனமும் அறிவித்துள்ளது. அமெரிக்காவில்  170 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட டிக்டாக் சேவை நேற்று திடீரென முடங்கியதால் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் மீண்டும் டிக் டாக் செயலி செயல் பட அனுமதி அளிக்க போகும் டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் 20 முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவற்றில் ஒன்று டிக் டாக் செயலி அமெரிக்காவில் அனுமதிக்கப்படும் என்ற செய்தியும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே டிக் டாக் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!