60 அடி உயர பாலத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி.. துயரத்தில் முடிந்த சம்பவம்

புதன், 14 ஆகஸ்ட் 2019 (18:32 IST)
பெரு நாட்டில் 60 அடி உயர பாலத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்ட காதல் ஜோடிக்கு துயர சம்பவம் நடந்துள்ளது.

பெரு நாட்டைச் சேர்ந்த மேபேத்-ஹெக்டார் ஆகிய காதல் ஜோடி, 60 அடி பாலம் ஒன்றின் மேல் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது காதலன் ஹெக்டார், தனது காதலி மேபேத்தை, பாலத்தின் தடுப்பு சுவர் மீதி உட்காரவைத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

அப்போது இருவரும் நிலை தடுமாறி, கீழே விழுந்தனர். இதில் மேபேத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெக்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் உன் நாடு எனது நாடும் – பாலிவுட் பிரபலங்கள் இணைந்த பாடல்