உன் நாடு எனது நாடும் – பாலிவுட் பிரபலங்கள் இணைந்த பாடல்

புதன், 14 ஆகஸ்ட் 2019 (17:31 IST)
புல்வாமா தாக்குதலில் இறந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் தியாகத்தை சிறப்பிக்கும் வகையில் “தூ தேஷ் மெரா” என்ற பாடலை இந்தி முன்னணி நடிக, நடிகையர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

நாளை சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கும் இந்த பாடலின் போஸ்டர் சி.ஆர்,பி.எஃப்-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இன்று பகிரப்பட்டுள்ளது.

இந்தி முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாரூக் கான், அமீர் கான், ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் ஆகியோர் இந்த பாடலின் காட்சிகளில் நடித்துள்ளனர்.

தேசிய உணர்வு, தியாகம், வீரம் ஆகியவற்றை எடுத்துரைக்குமாறு இந்த பாடலை எழுதியுள்ளார் பாடலாசிரியர் குமார். மீத் ப்ரோஸ் இசையமைக்க ஜேவித் அக்தர், கப்பிர் சிங் உள்ளிட்டோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வாட்ஸ் ஆப் செயலியை மோடி அரசு முடக்கப்போவதாக கூறியதா?? உண்மை பின்னணி என்ன?