சொன்னபடி குளத்திற்குள் பிரவேசிப்பார் அத்திவரதர் – காஞ்சி கலெக்டர்

திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (15:34 IST)
அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்படுவதாக போலி தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் காஞ்சிபுரம் ஆட்சியர்.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1 தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. ஆகஸ்டு 16 இரவு வரை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 17ம் தேதி ஆகம விதிகளின்படி அத்திவரதருக்கு பூஜைகள் செய்து மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படுவார் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலும் அத்திவரதர் தரிசனம் நீடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது குறித்து கூறிய அவர் “சொன்னபடி 17ம் தேதி அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்படுவார்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அமெரிக்காவிலும் பரவியது ஹிந்தி – வகுப்புகள் எடுக்கும் இந்திய தூதரகம்