Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

9 மாத குழந்தையுடன் பனி படர்ந்த சிகரத்தில் ஏறியதல் விபரீதம்: பெற்றோரின் பொறுப்பற்ற செயலுக்கு கண்டிப்பு!

Advertiesment
பொறுப்பற்ற பெற்றோர்

Siva

, புதன், 22 அக்டோபர் 2025 (09:46 IST)
போலந்தின் மிக உயரமான சிகரமான ரைசி மலையில் , ஒன்பது மாத குழந்தையுடன் லிதுவேனியன் தம்பதியினர் மேற்கொண்ட சாகசம், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான வானிலை, கடும் பனி மற்றும் எச்சரிக்கைகளையும் மீறி, எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர்கள் மலையேற முயற்சித்துள்ளனர்.
 
முறையான சாதனங்கள் இல்லாததால், பனிபடர்ந்த சிகரத்தில் இருந்து கீழே இறங்க முடியாமல் அந்த தம்பதியினர் சிக்கி கொண்டனர். தந்தை, மலையேற்ற வழிகாட்டியிடம் கிராம்ப்பன்களை இரவல் கேட்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஒரு வழிகாட்டி, அந்த குழந்தையை பத்திரமாக தூக்கி சென்று காப்பாற்றினார். அதிர்ஷ்டவசமாக, அக்குடும்பம் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
 
இந்தச் சம்பவம் வீடியோவாக பரவி வைரலான நிலையில், பலரும் சமூக ஊடகங்களில் பெற்றோரின் பொறுப்பற்ற செயலை கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். "குழந்தையின் பாதுகாப்பை பணயம் வைத்தது நம்பமுடியாதது; காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடுக்கை அடித்தால் தானாக திறக்கும் கோவில் நடை! ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயத்தை காண குவிந்த மக்கள்!