இஸ்ரேல் - காசா போரில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் கால் வைத்தால் கைது செய்யப்படுவார் என பல நாடுகளும் அறிவித்துள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் காசாவை தாக்கத் தொடங்கிய இஸ்ரேல் கடந்த சில ஆண்டுகளில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது. இது இனப்படுகொலை என பல நாடுகளும் கண்டித்தன. நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்கா தலையீட்டால் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் அமலாகியுள்ள நிலையிலும் நேதன்யாகு மீதான கைது வாரண்ட் அமலில் உள்ளது. இதனால் பெஞ்சமின் நேதன்யாகு கனடாவிற்குள் நுழைந்தால் அவரை கைது செய்வோம் என கனடா பிரதமர் மார்க் கார்னி எச்சரித்திருந்தார். இந்நிலையில் மேலும் பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் பெஞ்சமின் நேதன்யாகு மீதான சர்வதேச பிடிவாரண்டை செயல்படுத்துவோம் என கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், இதுவரை இஸ்ரேல் கொன்று குவித்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகளும் கிளம்பியுள்ளது இஸ்ரேலை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பல நாடுகளும் போர் நிறுத்தத்தை தொடர்ந்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அழுத்தம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K