கர்நாடகாவில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா அன்று உடுக்கை அடிக்கும்போது நடை தானாக திறப்பதை காண ஏராளமான பக்தர்கல் குவிந்தனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டத்தில் உள்ள பிண்டுகா கிராமத்தில் மலை அடிவாரத்தில் தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. மலை மீது தேவிரம்மன் சிலை ஒன்று அமைந்துள்ளது. ஆனால் மலை மீது செல்ல ஆண்டுக்கு ஒருமுறை தீப திருவிழாவின்போது மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இந்த கோவிலில் மற்றுமொரு சிறப்பும் உண்டு தீபாவளியையொட்டி நடைபெறும் தீப திருவிழாவின்போது உடுக்கை அடிக்கும்போது கோவில் நடை தானாகவே திறக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டும் தீப திருவிழா நடந்த நிலையில் இந்த வைபவத்தை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். உடுக்கை அடிக்கும்போது நடை தானாக திறப்பதை கண்டு அதிசயித்த மக்கள் தேவிரம்மனை வழிபட்டு சென்றுள்ளனர்.
மேலும் அருகே உள்ள மலை மீது பலரும் ஏறிச்சென்று தேவிரம்மன் சிலையை வழிப்பட்டுள்ளனர்.
Edit by Prasanth.K