Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை.. மொத்த மதிப்பு ரூ.9.5 கோடி..!

Advertiesment
தங்க ஆடை

Siva

, செவ்வாய், 21 அக்டோபர் 2025 (16:07 IST)
ஆடம்பரம் மற்றும் கைவினைத்திறனுக்கு பெயர்பெற்ற துபாய், உலகின் மிக அதிக எடையுள்ள தங்க ஆடையை அறிமுகப்படுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
 
சவுதி பிராண்டான அல் ரோமைசான் கோல்ட் வடிவமைத்த இந்த ஒற்றை ஆடையின் மொத்த எடை 10.5 கிலோகிராம் ஆகும். இது முழுக்க முழுக்க 24 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 9.5 கோடி  ஆகும்.
 
இந்த ஆடை, கிரீடம், நெக்லஸ், காதணிகள் மற்றும் இடுப்பு ஆபரணம் என நான்கு பகுதிகளை கொண்டது. இது மத்திய கிழக்கு கலை வடிவமைப்பு உத்வேகத்துடன் வைரங்கள், ரூபிகள் மற்றும் மரகதங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 
ஷார்ஜாவில் நடைபெற்ற நகை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த தங்க ஆடைக்கு, அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனைகள் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடை வடிவமைப்பையும், நகைக் கலையையும் ஒன்றிணைக்கும் முயற்சி என்று படைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றபோது நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி!