Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் பிரதமர் எதிர்ப்பு... வெளிநாடுகளிடம் இந்தியா விளக்கம் !

காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் பிரதமர் எதிர்ப்பு... வெளிநாடுகளிடம் இந்தியா விளக்கம் !
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (20:29 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்து அளிக்கின்ற 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதாவை, மாநிலங்களவையில் பாஜக அரசு  இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே இதுகுறித்த அறிவிப்புகள் இருந்தநிலையில், தற்போது அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது, பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் அமைப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என்று  உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. 
 
இந்நிலையில் இன்று பாஜக அரசு இன்று காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மாநிலங்களவையில் ரத்து செய்தது. திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இதை எதிர்த்தன. ஆனால் அதிமுக இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் மத்திய பாஜக அரசின்  இந்த முடிவுக்கு ஆர். எஸ் .எஸ், சிவசேனா, பிஜூ ஜனதாதளம், அதிமுக ,ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் , பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதவு அளித்துள்ளன. 
 
இன்று மாலையில் மாநிலங்களவையில் காஷ்மீர் பிரிப்பு மசோதா நிறைவேற்றபட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 மசோதாக்களும் ,எதிராக 61 வாக்குகள் பதிவாகின.  காஷ்மீர் இட ஒதுகீட்டு மசோதா மற்றும், ஜம்மு காஷ்மீரை பிரிக்கும் மசோதா,மற்றும்  ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபின்னர் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. 
 
இந்நிலையில்  காஷ்மீர் குறித்த இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.  
 
எனவே இந்திய தூதரக அதிகாரிகள் ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்லிட்ட நாட்டு அதிகாரிகளிடம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவு எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து  விளக்க அளித்தனர்.
 
இந்நிலையில் காஷ்மீரில் உள்ள எல்லெஇ மறுவரையறை செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரின் நிலை இனி என்னவாக இருக்கும்? - விளக்குகிறார் ஏ.ஜி.நூரணி